ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அர்னால்டு. இவருக்கு தற்போது 74 வயது ஆகும் நிலையில் பிட்னஸ் உடன் சூப்பர் ஆக்டிவாக வலம் வருகிறார். நடிகர் அர்னால்டு டெர்மினேட்டர் என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் அர்னால்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதாவது சாலையில் ஒரு ராட்சச பள்ளம் இருந்துள்ளது.

இந்த பள்ளத்தில் சாலையில் செல்லும் கார்கள், சைக்கிள்கள் அடிக்கடி மாட்டிக் கொள்வதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாக இருந்ததால் நடிகர் அர்னால்டு தன்னுடைய குழுவினருடன் நேரடியாக களத்தில் இறங்கி சாலை பள்ளத்தை சரி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படுவைரல் ஆகி வருகிறது. மேலும் நடிகர் அர்னால்டின் இந்த செயலுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.