
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநரை பொறுத்தவரை மசோதாவை மறுபரிசீலனை பண்ணுவதற்கு அனுப்பினாலும் கூட, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில்…. அவ்வளவு அவசரமாக சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டிய அவசியம் என்ன ? 1994இல் புரட்சித்தலைவி அம்மா வேந்தராக சி.எம் இருக்கலாம் என்று அடிப்படையில் சட்டம் கொண்டு வரும்பொழுது… அதை திரும்பப் பெற்றது எந்த அரசாங்கம். அப்போது ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் அரசாங்கம்.
1996 இல் பேராசிரியர் அன்பழகன் நிதி துறை அமைச்சராக இருக்கும் பொழுது, பல்கலைக்கழகங்களினுடைய தனித்தன்மையை பாதிக்கப்படும் என்று சட்ட மன்றத்திலே சொல்கிறார். அப்போ மாமியார் உடைச்சா மண் குடம், மருமகள் உடைச்சா பொன் குடம். அந்த மாதிரி ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஒன்று…… எதிர்கட்சியாக இருக்கும் பொழுது ஒன்று….
ஒட்டுமொத்தமாக பார்த்தீர்கள் என்றால், திமுக என்பது முரண்பாடுகளின் ஒட்டுமொத்த உருவம். அவர்களுக்கு தேவையான….. ஜால்ரா தட்டுகின்ற…. ஒத்திசை பாடுகின்ற…. எல்லாவற்றிற்கும் தலையாட்டுகின்ற ஆளுநர் இருந்தால், ஆளுநர் நாட்டிற்கு தேவை என்று சொல்லுவார்கள். ஆளுநர் பதவியே தேவையில்லை என சட்டமன்றத்தில் சொல்லுகிறார் என தெரிவித்தார்.