இன்டர்நெட் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போதுள்ள முக்கிய இணைய சேவை வழித்தடங்களை காட்டிலும் பத்து மடங்கு வேகமானது என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு வினாடிக்கு 1200 ஜிபி டேட்டா டிரான்ஸ்பர் செய்ய முடியும். அதனைப் போலவே 150 எச்டி படங்களை ஒரு நொடியில் டவுன்லோட் செய்யும் அளவுக்கு இது வேகம் கொண்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.