இந்தியாவில் உள்ள பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக flipkart இருக்கிறது. flipkart-ல் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு தற்போது அசத்தலான தள்ளுபடிகள் போடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது realme நிறுவனத்தின் ஸ்மார்ட் போனை தள்ளுபடி விலையில் வாங்கலாம். Realme 10 pro plus 5G ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 27999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனுக்கு 7 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதால் ரூ. 25,999-க்கு வாங்கிக் கொள்ளலாம்.

இந்த விலை அதிகமாக இருக்கிறது என நினைக்கும் வாடிக்கையாளர்களுக்காக மற்றொரு சலுகையையும் பிளிப்கார்ட் வழங்குகிறது. அதாவது பயனர்கள் தங்களுடைய பழைய ஸ்மார்ட் போனை மாற்றிக் கொண்டால் 25 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். நீங்கள் எக்சேஞ்ச் செய்யும் போன் நல்ல கண்டிஷனில் இருப்பதோடு லேட்டஸ்ட் மாடலாகவும் இருக்க வேண்டும். மேலும் 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் ஃபோனை வெறும் 999 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.