பொதுவாகவே மக்கள் வெளியில் பயணம் செய்யும் போது பொது இடங்களில் உள்ள சார்ஜிங் பாய்ண்ட்களில் செல்போனை சார்ஜ் செய்வது வழக்கமான ஒன்றாகும். அப்படி பொது இடங்களில் செல்போன் சார்ஜ் போடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். விமான நிலையங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களில் இருக்கும் USB சார்ஜிங் வசதியை பயன்படுத்த வேண்டாம்.

ஏனெனில் இதன்மூலம் மால்வேர், வைரஸ் உள்ளிட்டவற்றை உங்கள் செல்போனில் ஏற்றுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மாறாக சார்ஜரை மின்சாரத்தில் போடும் வசதியை மட்டுமே பயன்படுத்தவும்.