செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவங்க டெட் தேர்வு எழுதி இருக்காங்க. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி இருக்காங்க. எல்லோருமே உரிய கல்வி தகுதி வைத்து தேர்வு எழுதி,  தேர்ச்சி பெற்று இருக்காங்க. பணி நியமனம் செய், பணி உறுதிப்படுத்து இவங்க. இன்னொரு பிரிவினர் இடைநிலை ஆசிரியர்கள் ( இடைக்கால பகுதி நேர ஆசிரியர்கள்)  எங்களை பணி நிரந்தரப்படுத்து அவங்க கோரிக்கை. இன்னொருத்தர் சம வேலை வாங்குறீங்க,  சம ஊதியம் குடுங்க, சம்பளம் கொடுங்கள் என்பது அவுங்க கோரிக்கை.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய தம்பி அன்பில் மகேஷ் அவர்கள்,  நேத்து ஊடகத்தை சந்தித்து அவர் பேசும்போது,  சம வேலை, சம ஊதியம் கொடுங்க என்பவர்களுக்கு  ஊதியத்தை உயர்த்தி அவர் அறிவிக்கல. 2500 உங்களுக்கு கூட கொடுத்திருக்கிறோம் என சொல்லல. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரமாக்கணும்னு கேக்குறாங்க இல்ல,  அவங்களுக்கு போய் 2500 ஊதிய உயர்வு என  சொல்றாரு.

ஒரு அடிப்படையில போராட்டக்காரர்கள் என்ன கோரிக்கையை முன்வைத்து போராடுகிறார்கள் என்பது கூட தெரியாம,  நீங்க என்ன பள்ளி கல்வித்துறை அமைச்சரா இருக்கீங்க ? நீங்க எதுக்கு ஊடகத்தை சந்தித்து  பேசுறீங்க ? அவங்க கோரிக்கை எனக்கு ஊதிய உயர்வு. சம வேலை,  சம சம்பளம். அதுக்கு சொல்ல வேண்டியதை,   பகுதி நேர ஆசிரியர்கள் (பணி நிரந்தரம்) கேக்குறவங்களுக்கு ஊதிய உயர்வு 2500 ரூபாய் கொடுக்குறீங்க.

இது எல்லாத்தையும் விட கொடுமை 10 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை அறிவிக்கிறாங்க. என்ன கொடுமை பாருங்க ? நாங்க கேட்கிறது என்ன ? நீங்க அறிவிக்கிறது என்ன ? என்ன அறிவிக்கிறீங்க ? தேர்வு எழுதி இருக்கிற இவங்க என்ன சொல்றாங்க ?  நாங்க தேர்ச்சி பெற்றிருக்கிறோம்,  பணி நியமனம் செய்யுங்கன்னு கேக்குறாங்க, பணியை கொடுங்க, பணியை உறுதிப்படுத்துங்கன்னு சொல்றாங்க என தெரிவித்தார்.