இணையதளத்தில் தினமும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களை ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தி உள்ளது. ஒரு மெட்ரோ ஸ்டேஷனில் எஸ்கலேட்டரில் மேலே செல்லும் நபரிடம், சுமார் 7–8 வயதுடைய சிறுவன் ஒருவர் திடீரென்று வந்து, “10 ரூபாய் குடு இல்லன்னா உன் போனை திருடி விடுவேன்!” என கூறினார். இது கேட்க ஹாலிவுட் வில்லன்களின் டயலாக் மாதிரியே இருந்ததால், அந்த நபர் முதலில் சிரித்து விட்டார்.
View this post on Instagram
ஆனால், அந்த சிறுவன் அங்கிருந்து செல்லாமல், தொடர்ந்து “நீ தரலையா, நான் அடிச்சுறேன்” எனவும் கூறியதால், அதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பிச்சை கேட்பதில் கூட வித்தியாசமான அணுகுமுறை பார்த்த மக்கள், இது ஒரு பக்கம் சிரிப்பை கொடுத்தாலும், மறுபக்கம் கவலையையும் ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.
இந்த வீடியோ, Instagram-ல் @awara.jugnuu என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள், “இந்தக் குழந்தை ஒரு பக்கம் நகைச்சுவையை தருகிறார், ஆனால் இதன் பின்னணியில் ஒரு சமூகப் பிரச்சனை மறைந்திருக்கிறது” எனக் கூறியுள்ளனர்.
