டைரக்டர் விஜய் இயக்கத்தில் வெளியாகிய தியா திரைப்படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடி ஆக நடித்தவர் தான் நாக சவுர்யா. ஹைதராபாத் சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை அடித்துள்ளார். இதனை பார்த்த நாக சவுர்யா அவரை தடுத்ததோடு, அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்குமாறு வாலிபரிடம் கூறினார். எனினும் அந்த வாலிபரோ கோபப்பட்டு அவள் என் காதலி என்று சொல்லி மன்னிப்பு கேட்க மறுத்தார்.

அதற்கு காதலியாக இருந்தாலும் அடிப்பது தவறு தான் என கூறினார் நாக சவுர்யா. அதன்பின் அந்த பெண் தன் காதலரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. யார் யாரை அடித்தால் நமக்கு என்ன என்று செல்லாமல் சாலையில் இறங்கி அந்த வாலிபரை கண்டித்த நாக சவுர்யா, நிஜ ஹீரோ என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.