சர்வதேச ஒரு நாள் போட்டியில் சீக்கிரமாக 10,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர்  என்ற சாதனையை படைத்து ரோகித் சர்மா தற்போது அசத்தி இருக்கின்றார்.

ஒருநாள் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாட கூடிய வீரர்களில் என்றால் ? ஒன்று விராட் கோலி. மற்றொன்று ரோகித் சர்மா என சர்வதேச அளவில் பேசப்பட்டு வரக்கூடிய சூழலில் 241 வது ஒரு நாள் இன்னிங்ஸ் ரோஹித் சர்மா 10,000 ரன்களை கடந்திருக்கிறார்.

10,000 ரன்களை வெறும் 205 இன்னிங்ஸ் கடந்து முதல் அதிவேகமாக 10,000 ரன்களை கடந்தவர்  என்ற சாதனையை விராட் கோலி வைத்திருக்க கூடிய நிலையில், இரண்டாவது வேகமாக தற்போது ரோகித் சர்மா10,000 எடுத்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸில் 10,000 ரன்னை  கடந்து இருக்கிறார். 30 சதம், 50 அரை சதம் அடித்துள்ள ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் 200 ரன்களை  அதிக முறை அடித்தது என்ற சாதனையை தன்னிடம் வைத்துள்ளார்.