
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார், குஷ்பூ கருத்து தெரிவிக்கின்றேன் என்ற பெயரில், பட்டியல் இன சமூகத்தையும், உழைக்கும் வர்க்கத்தையும் ரொம்ப கொச்சைப்படுத்துகின்ற வகையில் பதிவை பதிவிட்டிருந்தார்கள். அந்த பதிவை கண்டிக்கும் வகையில் திருமதி குஷ்பூ சுந்தர் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் SC அணி சார்பாக வன்மையாக கண்டித்து இருந்தோம்.
திருமதி. குஷ்பூ அவர்கள் மகளிர் ஆணையம் உறுப்பினராக இருப்பது இப்பொழுதுதான் அவர்களுக்கு ஞாபகத்திற்கு வந்ததா என்பதுதான் என்னுடைய கேள்வி. அன்பு சகோதரி அனிதா அவர்கள் நீட் தேர்வில் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார்…. உயிரை மாய்த்துக் கொண்டார்…. அப்பொழுது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார் ?
மணிப்பூரில் அன்பு சகோதரிகள் நிர்வாணபடுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பொழுது….. அதுவும் பாஜகவினரால் தூண்டிவிடப்பட்ட கலவரத்தால்…. மகளிர்கள், பெண்கள் பாதிக்கப்பட்ட பொழுது இந்த குஷ்பூ, வானதி சீனிவாசன் போன்ற பாஜகவில் இருந்தவர்கள் எங்கு போனார்கள் ? என்பது எங்களுடைய கேள்வியை எழுப்புகின்றேன் என தெரிவித்தார்.