திருச்சி ஸ்ரீரங்கம் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் வழக்கை ரத்து செய்ய கோரி அர்ஜுன் சம்பத் மனு தாக்கல் செய்திருந்தால் அந்த வழக்கு ரத்து செய்யக்கூடாது என அரசு தரப்பில் உச்சவியல் வழக்கறிஞர் அன்பு நீதி ஆஜராகி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் அரசு தரப்பு வாதத்தை தொடர்ந்து பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என குறிவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே கடந்த 2006 ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தியது  தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் மீது திருச்சி ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. எந்த ஆதாரமும் இல்லாதாமல் அனுமானத்தின் அடிப்படையில் என் மீது   வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு அலைக்கழிக்கும் வகையில் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது . என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து கிழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதி மந்திரத்தை மதுரை கிளையில் அர்ஜுன் சம்பத் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி, பெரியார் சிலை சேதப்படுத்தியது தொடர்பாக மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று செயல்களால் சட்டப் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த வழக்கு திருச்சி விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று ஏழு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறி அர்ஜுன் சம்பத் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.