மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில் விஜயகாந்தின் உடல் நிலை  பின்னடைவை சந்திப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு தீவிரமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. மிக முக்கியமாக டிரக்கியாஸ்டமி  என்று சொல்லக்கூடிய மருத்துவ முறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

டிரக்கியாஸ்டமி என்றால் என்ன ? என்று ஏற்கனவே இந்த வார்த்தை நமக்கு பரிச்சயமான வார்த்தை தான். ஏனென்றால் முன்னாள் அமைச்சர்களான ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகிய  இருவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நேரத்திலே அவர்களுக்கு சுவாசிப்பதிலே பிரச்சனை இருந்த நேரத்தில் இந்த டிரக்கியாஸ்டமி சிகிச்சை முறைதான் கையாளப்பட்டது.

டிரக்கியாஸ்டமி சிகிச்சை முறை என்னவென்றால்,  அது ஒரு அறுவை சிகிச்சை முறை. மூச்சு குழலில் நுரையீரலில் தொற்று ஏற்படும் போது சுவாசிக்க முடியாத ஒரு நிலை ஏற்படும்.   இதனால் தொண்டைக்கு கீழ்புறமாக கழுத்து பகுதியிலே துளையிட்டு ஒரு செயற்கை குழாய் மூலமாக உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளே செலுத்தப்படும்.

இயற்கையாகவே நாம் சுவாசிக்கும் போது மூக்கு வழியாக காற்றை சுவாசித்து,  அதன் பிறகு ஆக்சிஜனை உள்ளே எடுத்துக் கொள்வோம். கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படும். ஆனால் நோய்வாய்ப்பட்டவர்கள்,  நுரையீரலில் தொற்று ஏற்பட்டவர்கள் சுவாசிக்க முடியாத ஒரு சூழல் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் இருக்கக்கூடியவர்களுக்கு இந்த  டிரக்கியாஸ்டமி சிகிச்சையானது வழங்கப்படுவது வழக்கம்.

அந்த அடிப்படையிலே விஜயகாந்த் அவர்களுக்கு தற்போது டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. மூச்சுக் குழலில் நுரையீரலில் தொற்று ஏற்படும் போது சுவாசிக்க முடியாத ஒரு நிலை ஏற்படும். இதனால் தொண்டைக்கு கீழ் புறத்திலே….  கழுத்து பகுதியில் துளையிட்டு  ஒரு சேர்க்கை குழாய் மூலமாக உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் செலுத்தப்படும் என்று இந்த முறையை குறிப்பிடுகின்றோம்.