கனமழையால் ஹைதராபாத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் தண்ணீர் தேங்கி கிடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையிலேயே நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படியான கடும் சூழ்நிலைக்கிடையே, ஒரு மனிதத்துவச் சம்பவம் அனைவரையும் நெகிழ வைக்க செய்துள்ளது. வெள்ளம் நிரம்பிய சாலையில் பைக்குடன் தவித்த ஒருவரை, மூன்று டெலிவரி பாய்கள், அவரை மீட்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Hey @zomato @Swiggy, just wanted to share that your riders not only delivered food during this deluge, but also saved me and my bike from being swept away in the stormwater. They did the same for hundreds of people like me trying to reach home at midnight in Hyderabad. pic.twitter.com/gsgw5UyGW4
— Sumit Jha (@sumitjha__) September 17, 2025
பரவும் வீடியோவில், ஒரு பைக் ஓட்டுனர் வெள்ளப்பெருக்கில் கட்டுப்பாட்டை இழந்து தவிக்க, மூன்று இளைஞர்கள், ஒருவர் சிவப்பு ஜாக்கெட்டில், மற்றொருவர் மஞ்சள் ஜாக்கெட்டில், மற்றொருவர் ஆரஞ்சு ஜாக்கெட்டில் வந்துவிட்டு அவரை மற்றும் அவரது பைக்கை காப்பாற்றுகிறார்கள். இதில் அனைவரும் உணவுப் பொருள் மற்றும் மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் பாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பகிர்ந்த @sumitjha என்ற பயனர், “இந்த மூவர் உணவை டெலிவரிப் பண்ணல, உயிரை டெலிவர் பண்ணிட்டாங்க!” என தெரிவித்துள்ளார்.
சாதாரண வேலைக்காரர்களாக கருதப்படும் இவர்கள், கடின சூழ்நிலையில் தங்களது கடமையை மீறி மனிதாபிமானம் காட்டி வாழ்வையும் பொருளையும் காப்பாற்றியுள்ளனர். சமூக வலைதளங்களில் இவர்களை “ரியல் ஹீரோஸ்” என்ற புகழ்ந்து வருகின்றன. இந்த சம்பவம், மனிதத்துவம் இருக்க வேண்டியது எந்த பதவியிலும் இல்லை, மனதில் தான் இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்க்கைப் பாடமாக மாறியுள்ளது.
