இந்தியாவில் அதிக விபத்துகள் நடக்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட 2022 தரவின் படி , சாலைப் பாதுகாப்பானது  குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும் நகரங்களை  வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 5652 விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், பட்டியலில் முதலிடத்தில் தேசிய தலைநகர் டெல்லி உள்ளது. இந்த அதிகளவிலான  எண்ணிக்கைக்கு  நகரத்தின் அதிக போக்குவரத்து, அடர்த்தியான மக்கள் தொகை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் 4680 விபத்துகளுடன் பட்டியலில் இரண்டாவது நகரமாக உள்ளது, அதைத் தொடர்ந்து ஜபல்பூர், போபால், பெங்களூர், சென்னை, ஜெய்ப்பூர், ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகியவை ஒரே ஆண்டில் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகளை பதிவு செய்துள்ளன. ஒவ்வொரு நகரமும் சாலை விபத்துக்களுக்கு பங்களிக்கும் தனித்துவமான காரணங்களை  கொண்டிருந்தாலும், போக்குவரத்து நெரிசல், சாலை உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளுக்கு பொதுமக்கள் இணங்காமை  ஆகியவை பொதுவான பிரச்சினைகளாக பார்க்கப்படுகிறது.

இந்த நகரங்களில் மேம்படுத்தப்பட்ட சாலை வடிவமைப்பு, மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை மற்றும் வலுவான பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உள்ளிட்ட விரிவான சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசரத் தேவையை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் எனவும், அனைத்து சாலைப் பயனாளர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், இந்த நகர்ப்புற மையங்களின் குடிமக்களுக்கு பாதுகாப்பான பயணங்களை உறுதி செய்வதற்கும் சாலைப் பாதுகாப்பு முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும். விபத்துகளைக் குறைப்பதற்கும், இந்தியாவின் சாலைகளை அனைவருக்குமான பாதுகாப்பான சாலையாக  மாற்றுவதற்கும் அதிகாரிகள் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் இது குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.