செய்தியாளர்களிடம் பேசிய விகே.சசிகலா, சினிமா தொழில் எடுத்துகோங்க…  சினிமா தொழில்  இன்னைக்கு என்ன ஆயிட்டு இருக்கு ? நீங்க பாத்தீங்கன்னா….  மழை காலத்துல மழை வருது,  புயல் வருது அப்படின்னு சொன்னா ரெட அலட் கொடுப்பாங்க. இப்ப சினிமா துறைக்கு ஒரு ரெட் அலர்ட் இருக்கு. அது என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா…? யாரும் படம் எடுக்க முடியல.

உங்கள மாதிரி யங்ஸ்டர்ஸ் புதுசா இந்த ஃபீல்டுக்கு வந்து, நமக்கு திறமை இருக்கு… நம்ம ஒரு டைரக்டர் ஆகலாம் அப்படின்னா…. இப்ப எல்லாம் ஆக முடியாது. காரணம் என்னன்னா….  நீங்க படம் எடுக்குறீங்கன்னா…. உங்க பெயரை போட்டு வர முடியாது. அதுக்கு இவங்களே இருக்காங்க.

அதனால யாரா இருந்தாலும் சரி, படம் எடுத்தாங்கன்னா …அவங்க கிட்ட கொடுத்திடனும். அதே மாதிரி பார்த்தீங்கன்னா… படம் எடுக்குற தயாரிப்பாளர்கள் யாராவது நீங்க சொல்லுங்க ? இப்போ அம்மா அரசாங்கத்தில் இருந்தப்ப,  சினிமா தொழில் இருந்ததையும் பாருங்க,  இப்பவும் பாருங்க. நான் லியோ படத்துக்கு மட்டும் சொல்லவில்லை,  நான் பொதுவாக சொல்கிறேன்.  நான் ஏன் ஒரு படத்துக்கு மட்டும் சொல்ல போறேன் . பொதுவா இதான் நடக்குது.

இந்த அரசாங்கத்துல இதையும் பண்றாங்க அவங்க. எங்க பாத்தாலும் ஒன்னு படத்தை அவங்க கிட்ட கொடுக்கணும்,  அவங்களே ஆளை  போடுவாங்க…. அவங்களே விநியோகம் பண்ணுவாங்க… அவுகளே  பிளாக் டிக்கெட்டை விப்பாங்க. அப்ப போலீஸ்காரங்க எப்படி போய் கண்ட்ரோல் பண்ண முடியும் ? இதுதான் நடந்துகிட்டு இருக்குது.

இதெல்லாம் வெளியில சொல்ல முடியாது. சொன்னாலும் நீங்க போடுறது உங்களை ரொம்ப கஷ்டம்.  உங்களுக்கெல்லாம் இதை போடலாம்ன்னு எண்ணம் இருக்கலாம்.  ஆனால்  உங்களுடைய மேனேஜ்மென்ட் விடணுமே,  விட்டா தானே நீங்க போட முடியும். அதனாலதான் நான் மக்கள் கிட்டையே சொல்லிட்டு வந்துருவேன் என தெரிவித்தார்.