ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி யூனியன் கூட்ட அரங்கில் வைத்து  2 நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சி முகாம்  வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதற்கு மாவட்ட வளமைய ஒருங்கிணைப்பாளர் சிவகாமி முன்னிலை வகிக்க, பயிற்சி முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மேகலா தொடங்கி வைத்தார்.

திருவாடானை வட்டாரத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்ட இந்த  பயிற்சியில் பயிற்றுநர்கள் ஜெயந்தி, ராஜேஸ்வரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இவர்கள்  ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். இறுதியில் இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி கையேடுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.