கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மற்றும் கிள்ளை ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தட்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த ஆண்டனி ஜோசப்ராஜ்(35) என்பது தெரியவந்தது.

இவருக்கு ரூபிமெல்ட்டா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஆண்டனி ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்து சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த ஜோசப் சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.