கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தாலுகா பெருந்துறை மேட்டு தெருவில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மணி கடந்த பத்தாம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மணி மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று காலை மருத்துவமனையின் ஐந்தாவது வார்டிற்கு அருகே இருக்கும் மாடிக்கு செல்லும் படிக்கட்டு கைப்பிடியில் மணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து டாக்டர்களும், ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணியின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.