கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேர்வக்காரன்பாளையத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் வாழை மரங்கள் சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் திடீரென வாழை மரங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாழையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 300 வாழை மரங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து முருகானந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் யாராவது பீடி குடித்துவிட்டு வீசியதால் தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.