கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் புதைகுழியில் சிக்கியதாக கூறப்படுகிறது.

கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்று ஒருவர் பின் ஒருவராக 4 பேரும் நீரில் மூழ்கினர். கதவணையை  சுற்றி பார்க்க வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய மாணவிகளை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 4 மாணவிகளில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. தொடர்ந்து  ஒருவரை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், அவரது உடலும் மீட்கப்பட்டது.

அதாவது, தொட்டியத்தில் உள்ள கல்லூரியில் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக உடற்கல்வி ஆசிரியர் உதவியுடன் புதுக்கோட்டை விராலிமலையை சேர்ந்த நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 15 பேர் வந்திருந்தனர்.. இதில் 4 பேர் பலியாகி உள்ளனர்.. போட்டி முடிந்து திரும்பும் போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பலியான 4 மாணவிகளும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள். மீட்கப்பட்ட 4 மாணவர்களின் உடலும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

இந்நிலையில் ஆற்றில் இறங்கிய மாணவிகள் 4 பேரும் புதைகுழியில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கதவணை பகுதியில் மணல் அதிகமாக அள்ளப்பட்டதால் புதைகுழி உருவானது. இதனால் கதவனைப் பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, பலகை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் என்பதால் புதைகுழி பற்றி அவர்களுக்கு தெரியவில்லை..