தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக டாடா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் நடிகர் கவின் தற்போது ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் மேக்கிங் வீடியோ போன்றவைகள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது ஸ்டார் படத்தின் டிரைலர் வீடியோவை பட குழு இன்று வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர் வீடியோ ஒரு வளர்ந்து வரும் நடிகர் படும் அவமானங்கள், கஷ்டங்கள், அதனால் அவன் இழக்கும் நட்பு, காதல் போன்றவற்றை மையப்படுத்தி இருக்கிறது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களைக் கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் டாடா படத்தை போன்று ஸ்டார் படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.