இந்திய ரயில்வே வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 22,000 குரூப் ‘டி’ (Level-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிராக் மெயின்டெய்னர், அசிஸ்டெண்ட், பாயிண்ட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ (ITI) முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).

தேர்வு முறை: முதலில் கணினி வழித் தேர்வு (CBT), அதனைத் தொடர்ந்து உடற்தகுதித் தேர்வு (PET), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவை நடத்தப்படும்.

​முன்னதாக விண்ணப்பிக்கக் கடைசித் தேதி பிப்ரவரி 20 என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய திருத்தப்பட்ட அட்டவணையின்படி, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஜனவரி 31, 2026 அன்று தொடங்கி, மார்ச் 2, 2026 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கால அடிப்படை ஊதியமாக ₹18,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதர படிகளுடன் சேர்த்துச் சம்பளம் இன்னும் கூடுதலாகக் கிடைக்கும்.