கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குன்னிக்கொட்டா பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (22). இவர் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீர்த்தி (22) புதுச்சேரி நகரை சேர்ந்த இந்த பெண் பெற்றோர் இல்லாததால் ஆசிரமத்தில் தங்கி வளர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த இரு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில்  இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும்  தகராறு ஏற்பட்டதால்  மன உளைச்சலில் சத்தியமூர்த்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சத்தியமூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்த இரண்டே மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.