தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் நடித்த துணிவு படம் அண்மையில் வெளியானது. இன்று நடிகர் அஜித் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் லைகா நிறுவனம் தற்போது ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு விடா முயற்சி என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் தல அஜித் பிறந்தநாளில் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.