தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி, வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் மாமன்னன் படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரடெக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. பிறப்போக்கும் எல்லா உயிருக்கும் என்ற தலைப்புடன் மாமன்னன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் நடிகர் உதயநிதியின் கடைசி படம் என்பதால் மாமன்னன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது.