சிட்னியில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (Perth Scorchers) மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையே டி20 போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக லாரி எவன்ஸ், ஆஷ்டன் அகர், ஆரோன் ஹார்டி மற்றும் மஹ்லி பியர்ட்மேன் ஆகிய நான்கு வீரர்கள் ஒரு ஊபர் (Uber) காரில் மைதானத்திற்குப் புறப்பட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பாதி வழியிலேயே அந்தக் கார் பழுதாகி நின்றுவிட்டது.

நேரம் ஆகிக்கொண்டிருந்ததால் பதற்றமடையாத வீரர்கள், சற்றும் யோசிக்காமல் காரில் இருந்து இறங்கி, டிராபிக் நடுவே காரைச் சாலையோரம் தள்ளிச் சென்று மெக்கானிக்கிற்கு உதவினர்.

“இது ஒரு வித்தியாசமான அனுபவம், செம ஜாலியாக இருந்தது” என வீரர் லாரி எவன்ஸ் சிரித்துக்கொண்டே பேட்டியளித்துள்ளார். கார் தள்ளிய கைராசியோ என்னவோ, அன்றைய போட்டியில் சிட்னி தண்டர் அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. கிரிக்கெட் வீரர்கள் கார் தள்ளும் இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பலரது லைக்குகளை அள்ளி வருகிறது.