சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று, உண்மையான நட்பிற்கு ஏழ்மை, செல்வம் அல்லது நிறம் ஒரு தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாட்டில்களின் மீது சிறுமி ஒருவர் அமர்ந்திருக்க, மற்றொரு சிறுமி அவருக்குத் தெரியாமல் பின்னால் இருந்து வருகிறார்.
She didn’t care about the gift, she just wanted her best friendpic.twitter.com/5OwU4oRj9A
— Massimo (@Rainmaker1973) December 27, 2025
இருவரும் ஒருவருக்கொருவர் அன்புப் பரிசுகளைக் கொண்டு வந்திருந்தாலும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தித்த மகிழ்ச்சியில் அந்தப் பரிசுகளைக் கூட கவனிக்காமல் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துத் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மசிமோ என்ற நபரால் பகிரப்பட்ட இந்த 25 விநாடி வீடியோ, இதுவரை லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.
குழந்தைகளின் இந்தத் தூய்மையான அன்பு, சாதி, மதம் மற்றும் இனப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்றும், வளர்ந்தவர்களின் உலகம் இவர்களிடமிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
