தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் வருண் தேஜ். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் ஆவார். நடிகர் வருண் தேஜ்க்கும் பிரபல நடிகை லாவண்யா திரிபாதியும் காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஜூன் 9-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. நடிகை லாவண்யா தமிழில் பிரம்மன் மற்றும் மாயவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை லாவண்யா மற்றும் வருண் தேஜ் திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் தற்போது வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.