செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய பிரியா பவானி சங்கர் தமிழ் சின்னத்திரையில் நடித்து வந்தார். அதன்பிறகு வெள்ளி திரையில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் தன் முதல் படத்திலேயே தனக்கான இடத்தை பிடித்தார். அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்த பிரியா பவானி சங்கருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர் தற்போது சிம்பு மற்றும் லாரன்ஸ் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்ததாக பிரபல நடிகர் விஜய்க்கு ஜோடியாக தளபதி 68 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்த பிறகு தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக இருக்கும் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்தால் அவர் விரைவில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்து விடுவார் என்பதில் ஐயமில்லை.