வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 10 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது.  அரசியல் ரீதியாக திமுக இதை எப்படி அணுகப்போகிறது என்பது மிக முக்கியமான கேள்வியாக இருக்கின்றது. இத்தனை ஆண்டுகளாக திமுக வைத்த வாதம் என்னவென்றால்,  ஒரு ஊழல் வழக்கில் திமுக தரப்பில் யாராவது ஒருவர் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்களா ? அதிமுகவின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு இருக்கிறார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

ஆனால் இப்போது அந்த மாதிரியான விமர்சனங்களை வைப்பதற்கான உரிமையை திமுக இழந்து விட்டதா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய திமுக செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான சரவணன்,   ஜெயலலிதா உடைய வழக்கையும் இதையும் கம்பேர் பண்ண முடியாது.  ஏன் என்று பார்த்தீர்கள் என்றால் ? அது 66 கோடிக்கு நாலு வருஷம் தான் சிறை தண்டனை கொடுத்தாங்க. இதுல 1  கோடியே 70 லட்சம் என சொல்றாங்க.

அதுக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை கொடுத்திருக்கிறார்கள். அதுவும் 25 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் தண்டனை கொடுத்து இருக்கிறார்கள். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னது போல….. இதுல ஒரு முக்கியமான குறைபாடு ஃபண்டமெண்டல் மிஸ்டேக் என்னவென்றால்….

பொதுவாகவே சொத்து குவிப்பு வழக்குகளில் முக்கியமாக எதிர்பார்ப்பாங்க….  உங்களுடைய சொத்துக்களை……  நீங்கள் வருமானவரித்துறையில் சரியான நேரத்தில் சொல்லி இருக்கிறீர்களா? உங்களுடைய வருமானம் எங்கிருந்து வந்திருக்கிறது என்பதை தான் கேட்பாங்க. இந்த வழக்கை பொறுத்தவரை இவர் எல்லாமே சொல்லி உள்ளார்.

வருமான வரி துறையில் வருமானம் எங்கிருந்து வந்துள்ளது என்பதை சொல்லியுள்ளதால் தான் கிழமை நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இப்ப உயர்நீதிமன்றத்தின் நீதி அரசர் என்ன சொல்கிறார் என்றால் ? நீங்க சொல்லி இருக்கீங்க.  இன்கம் டேக்ஸ்ல சொல்லி இருக்கீங்க… ஆனால் அதுக்கு தனியா சாட்சி எதுவுமே இல்லையே….. அதை எப்படி நான் நம்புவது ?  இது உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எல்லாம் எதிரானது அந்த வகையில் இந்த தீர்ப்பு கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தில் மாற்றி அமைக்கப்படும் அதுல எந்த சந்தேகமும் வேண்டாம் என தெரிவித்தார்.