அமெரிக்க நாடு, விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. அங்கு சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் சுனிதா வில்லியம்ஸ் (58) மூன்றாவது முறையாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.

இது அவரின் 3ஆவது விண்வெளி பயணமாகும். இதுகுறித்து பேட்டியளித்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி செல்கையில் தன்னுடன் பகவத் கீதை புத்தகம், விநாயகர் சிலையை கொண்டு செல்ல இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தான் தீவிர மதவாதி கிடையாது, ஆன்மிகவாதி என்றார் அவர்.