விழுப்புரம் நீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் பொன்முடி சரணடைய வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 21 ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடி சரணடைய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்முடிக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் சரணடைய மட்டுமே பொன்முடிக்கு 30 நாட்கள் அவகாசம் என நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். ஜனவரி 22 ஆம் தேதிக்குள் சரணடையாவிட்டால் அவர்களை கைது செய்யலாம் என ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 50 லட்சம் அபரதமும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டு சிறையும், 50 லட்சம் ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இருவரும் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் அவர்கள் சரணடையவில்லை என்றால் 22/01/2024 ஆம் தேதி அன்று அவர்களை கைது செய்து தண்டனையை அனுபவிக்க ஏதுவாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விழுப்புரம் நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதாவது இன்றிலிருந்து 30 நாட்களுக்கு தான் இருவரும் சரணடைவதற்கான அவகாசம் ஆனது அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் 30 நாட்களுக்குள் சரணடைய வேண்டும்.  21ஆம் தேதிக்குள் சரணடைவில்லை என்றால் 22ஆம் தேதி அவர்கள் கைது செய்து தண்டனை அனுபவிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.