
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில், இன்னைக்கு சமகாலத்தில் நீங்க சில அரசியல் வியாதிகளை எல்லாம் டிவில பார்த்திருப்பீங்க. அரசியல்வாதிகள் இல்லை, சில அரசியல் வியாதிகள். அவங்களுக்கு பத்திரிக்கையாளர்களை கண்டாலே அவங்க மேல விழுந்து, பிராண்டி, சில பேர் எல்லாம் அரசியல் தலைவர் என்ற பெயர்ல பத்திரிக்கையாளர்களை கடித்து வைத்து விடுகிறான்….
ஆனால் உள்ளபடியே சொல்கிறேன்… அன்பு சகோதரிகளே… தாய்மார்களே…. நண்பர்களே…. ஒரு பத்திரிக்கையாளராக சொல்கிறேன்….. எட்டாயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்க்கிற ஒரு சாதாரண பத்திரிக்கையாளனை அவ்வளவு கண்ணியத்தோடு நடத்திய ஒரே ஒரு தலைவன் உண்டென்றால், அந்த தலைவன் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தான்.
ஐயா மாசு அவர்கள் பேசுகின்ற போது சொன்னார்… தினமணி பத்திரிக்கையில் வந்த….செய்தியை பார்த்துட்டு 5. 30க்கு போன் அடிச்சாருன்னு… அதுல அவருடைய கெட்டிக்காரத்தனம் ஒன்னு இருந்துச்சு… அதை எத்தனை பேர் கவனிச்சிங்கன்னு தெரியல…. அஞ்சரைக்கு கலைஞர் அவர்க்கு மட்டும் போன் பண்ண மாட்டாரு… இதே மாதிரி பல அமைச்சர்களுக்கு… பல மேயர்களுக்கு போன் பண்ணுவாரு…..
அப்படி போன் பண்ணும் போது, எதிர்முனையில் இருந்து வர ஒரே பதில் என்ன தெரியுமா? அஞ்சரைக்கு போன் பண்ண உடனே….. அந்த பேப்பரை படிச்சியாயா ? அப்படின்னு சொன்ன உடனே…. தலைவரே இல்ல தலைவரே அப்படின்னு தான் வரும்…. ஆனால் அவரு மட்டும் படிச்சேன்னு சொன்னாரு… என்ன படிச்ச ? அந்தப் பார்க்கில் சாக்கடை தண்ணி ஓடுவதை படிச்சிட்டேன்…. அப்போ அஞ்சரைக்கு அவர் போன் பண்ணி அதைக் கேட்கும் போது அதற்கு தயாராக இருந்தார் பாருங்க… அது ரொம்ப முக்கியம்…. இப்படி எல்லாருக்கும் போன் பண்ற அவரு, பத்திரிக்கையாளருக்கு போன் பண்ணுவாரு என தெரிவித்தார்.