மதுரை மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த எட்டாம் தேதி மதுரை-நத்தம் சாலையில் புதிதாக பறக்கும் மேம்பாலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து சீராக இருப்பதற்கும் ஏற்ற வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவின்படி 24 மணி நேரமும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் போக்குவரத்து காவலர்களுடன் கூடிய ரோந்து வாகனம் நேற்று முதல் இயக்கப்பட்டுள்ளது. எனவே பறக்கும் பாலத்தின் மேலே வாகனத்தை நிறுத்தி செல்பி எடுப்பது, சாகசம் செய்வது, கேக் வெட்டுவது, பக்கவாட்டுச் சுவர்களில் அமர்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.