டெல்லியில் நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டெல்லியில் 8 பத்திரிக்கையாளர்களின் வீடுகள் உட்பட 30 இடங்களில் டெல்லி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். வெளிநாட்டிலிருந்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நியூஸ் கிளிக்ஸ் ஊடக நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.