விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசாகுளம் என்.எஸ்.கே நகர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவாவின் அண்ணன் பிரகாஷ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனால் மன உளைச்சலையில் இருந்த சிவா தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிவாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.