கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுங்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவை சித்தி விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் சூரியகுமார்(31), முகமது நிஷார்(22), பாலகிருஷ்ணன்(26) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1/2 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள், இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.