செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஒட்டுமொத்தமா விவசாயத்தை அழிச்சிட்டு…. ஒட்டுமொத்தமா சிறுகுறு தொழிலை அழிச்சிட்டு….  உங்களுக்கு தொழில் வளம்னா….  பெரிய அம்பானி, அதானியுடைய வளர்ச்சி தான் முக்கியமா இருக்கிறதே  தவிர,  ஒட்டுமொத்தமா உங்களுடைய வளர்ச்சி என்ன இருக்கு ? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன்னு சொன்னீங்க…. அண்ணாமலையை கேட்கின்றேன்…

எத்தனை கோடி பேருக்கு வேலை கொடுத்தீங்க ? ஒரு பிரைமினிஸ்டர் பத்தாண்டுகள் முடிகிறபோது….  140 கோடி மக்கள் வாழுகின்ற நாட்டில் 75,000பேருக்கு வேலை கொடுக்கிறேன் என்று சொல்கிறீர்கள்…. இது நியாயமா ? தமிழக முதலமைச்சரே அறிவிக்கிறார் அடுத்த ஆண்டுக்குள்ள நாங்க 50,000 பேருக்கு வேலை கொடுப்போம் என்று… கேரளாவில் சில லட்சம் பேருக்கு வேலை கொடுப்போம் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்தியா  முழுவதும் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்ற வாக்குறுதி என்ன ?  வெறும் 10 வருஷத்துல 75 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிற வாழ்க்கை என்ன ? எனவே இப்படிப்பட்ட நிலைமை தான்  இன்றைக்கு மாறி இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமை செய்திட்டு,  அண்ணாமலை கண்டதெல்லாம் புகார் சொல்லுறது, அது நாடாளுமன்ற உறுப்பினரை விமர்சிக்கிறது…. திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தின் மீது இல்லாத,  பொல்லாததை எல்லாம் சொல்லும்  நடவடிக்கை நான் வன்மையாக கண்டிக்கின்ற விரும்புகின்றேன்.