செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பேரறிஞர் அண்ணா பெருந்தகையினுடைய திருஉருவத்தை உள்ளடக்கி,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால்1972 இல் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம்,  50 ஆண்டு காலம் தமிழகத்தினுடைய நலனில்….

தமிழ் மக்களுடைய நலனில்…  உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்களுக்காக….  குரல் கொடுப்பது மட்டுமல்லாமல்,  அதற்கு ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபட்டு…  30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த இயக்கம்,  இந்த இயக்கம். இவ்வளவு பெரிய இயக்கம் ஒரு கட்சியினுடைய மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கூறுவது, சிறு பிள்ளைத்தனமாக கேள்வியாக நான் கருதுகிறேன்.

அந்தத் தனத்தை நாங்கள் எப்போதும் செய்ய மாட்டோம். ஒரு கட்சியை இப்படித்தான் நீங்கள் செய்ய வேண்டும் ?  இப்படித்தான் நடத்த வேண்டும் ? இவரை மாற்ற வேண்டும் என்று சொல்வதற்கு அவ்வளவு நாகரிகம் தெரியாத தலைவர்கள் நாங்கள் அல்ல.  அந்த இயக்கம் அப்படிப்பட்ட இயக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.