செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், அம்மையார் ஜெயலலிதா 2014இல் 37 இடங்கள் தனிச்சு வென்றாங்க.  யாரோடும்  கூட்டணி இல்லாமல்… நாங்க கூட  காங்கிரஸ் –  திமுகவை ஒழிக்கணும் என்பதற்காக அவங்கள ஆதரிச்சோம். 37 இடம் வென்றாங்க,  தனிச்சு தான் நின்னாங்க. மக்கள் அதெல்லாம் கேட்கல.

2019இல் DMK  39 இடம் கொண்டு போனாங்க… இப்போ 2024இல் நிக்கிறாங்க…  40 இடத்தையும் ஐயாக்கே குடுங்க… என்ன நடக்கும்? காவேரியில் தண்ணீர் வாங்கி தரேன்னு சொல்லி இருப்பாங்க….நாங்க வந்தா தரேன்னு ராகுல் காந்தியை சொல்ல சொல்லுங்க….   சிவாகுமார் துணை முதல்வர்…  சீதாராமையார்  அவங்களையும் வரச்சொல்லி, எழுதி வாங்குங்க.

அப்புறம் வேணா நாம ஓட்டு போடலாம். என் வாழ்க்கையை பத்தி கவலைப்படாத உனக்கு…. என் வாக்கு எதுக்கு ?  என் வாக்கை நீ வாங்கிட்டு…..  எனக்கு வாய்கு அரிசி போடுவியா?  என்ன மானங்கெட்ட கூட்டம் அப்படினு மதிப்பிட்டீயா…. எப்படி? என பேசினார்.