செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,  மருத்துவமனையில் 24 ஹவர் டூட்டி என்று சொல்வோம். 24 மணி நேரம் டூட்டி முடிஞ்சா…  அடுத்த நாள் அவருக்கு ஆஃப்.  என்பது அவருக்கு கேப். அவர் அன்னைக்கு இல்லனா….  அந்த மருத்துவருக்கு போன் பண்ற மாதிரி போன் பண்ணி, அவரை  சஸ்பெண்ட் பண்றாங்க. இதெல்லாம் நியாயம் இல்ல. ஒரு துறையே செம்மையாக வழிநடத்தனும்…. சீராக வழி  நடத்தணும்….  மருத்துவர்களையும்,  செவிலியர்களையும் கம்படபில் ஜோன்ல வைக்கணும். அந்த துறை சார்ந்தவர்களை நல்ல மனநிலையில் வச்சாதான் அவங்க சிகிச்சை குடுப்பாங்க.

இன்னைக்கு என்ன நிலைமை ? ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறோம். பிரியா என்ற கால்பந்து வீராங்கனைக்கு பிரச்சனை ஏற்பட்டது. தஸ்கிர் என்ற ஒரு இஸ்லாமிய குழந்தை உயிரிழக்க நேரிட்டது.  இன்றைக்கு ஜோதி என்ற பெண்மணி…  செய்தியில் நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆஞ்சியோகிராமுக்கு வந்தவங்களுக்கு ஆம்புடேஷன் பண்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் அமைச்சர் பதில் சொல்லி ஆகணும். இதை ஒரு விவாத பொருளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை ஒரு விவாத பொருளாக எடுத்துக் கொண்டு,  இதில் ஜஸ்டிபிகேஷன் சொல்லும் நிலையில் இந்த துறை இல்லை.

உயிர் காக்கின்ற துறை…. அந்த நோயாளியுடைய சிகிச்சைக்கு…. ஏற்படுகின்ற பாதிப்புக்கு…. இந்த அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். நீண்ட விவாதங்களையும்,  நீண்ட விளக்கங்களை எல்லாம் சொல்வதை தவிர்த்து,  கள  நிலவரங்களை நீங்கள் ஆராய வேண்டும். பணி நியமனங்களை செய்ய வேண்டும்.

இதை தான் அரசை வலியுறுத்துகிறோம். அரசுக்கு நல்ல ஆலோசனையை…. நல்ல கருத்துக்களை….. இந்த ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கு…. விமர்சனம் இல்லாமல் நடத்துவதற்கு… இனிமேல் விமர்சனம் இல்லாமல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை…. இரண்டு ஆண்டு காலத்தில என்ன நடந்தது ? என்று எல்லாத்துக்கும் தெரியும். அதனால விமர்சனம் இல்லாமல் நடத்துவதற்கு நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறேன் என தெரிவித்தார்.