பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது, ஸ்டாலின் அவர்கள் பாத்தீங்கன்னா….  எஸ்கேப் ஆயிட்டார். நீட்டை பத்தி அதிகமா பேசுறதில்லை. உதயநிதி கிட்ட கட்டிட்டாரு. ஏனென்றால் அவருக்கு தெரியும். இது நடக்காதுன்னு.. எனவே ஸ்டாலின் அவர்கள் இந்த சிக்கலில் சிக்குவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படியே உதயநிதி ஸ்டாலினை கொண்டு வந்துட்டாங்க.

இன்னைக்கு இவர் உள்ள புகுந்திருக்காரு. அதனால் தயவு செய்து என்னோட அன்பான வேண்டுகோள்…  திமுகவினுடைய சீனியர் தலைவர்கள்,  உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் என்ன ? மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ன ? அக்ரிடேசன் என்ன ? கண்கரண்ட் லிஸ்ட் என்ன ? ஸ்டேட் லிஸ்ட் என்ன ? அல்லது நீட்டினுடைய டேட்டாவை அவர் பாக்கணும்.  பார்த்தார் என்றால் மனசு மாறுவார்.

எலெக்ஷன் வரும்போது மக்கள் மனசு மாறும். மக்களவை தேர்தல் வரும் போது அவர்களுக்கு 36மாதம் ஆகி இருக்கும். திமுக அரசின்  36 மாத ஆட்சியும், பாரதிய ஜனதா கட்சியின்  9 ஆண்டு ஆட்சியும் தராசு தட்டில் வைத்து பார்க்கும் போது,  ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள்

சிஐஜி ரிப்போட்டை பொருத்தவரை தமிழ்நாடு அரசின் மீது எடுத்து வைத்தால் ? வேஸ்ட் ஃபுல் expenditure ,  எக்ஸ்ஸ்  expenditure என சொல்றாங்க. அது ஊழலா ? தமிழ்நாடு அரசு மேல இருக்கிற சிஐஜி ரிப்போர்ட் எடுத்து வச்சேன்னா..  வேஸ்ட் ஃபுல் expenditure என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துறாங்க. 200 கோடில முடித்து இருக்கணும்,  220 கோடி ஆகியிருக்கு.

அப்போ 20 கோடி ஊழல் என்று யாராவது சொல்வார்களா…?அதை எக்ஸ்ட்ரா expenditure என்று சொல்வீர்களா ? ஊழல்னு சொல்லுவீங்களா ? ஆனால் எதிர்க்கட்சியை பொறுத்த வரைக்கும் பேசுறது பேசலாம். சிஐஜி ஊழல்ன்ற வார்த்தை எங்க பயன்படுத்திருக்காங்க. எந்த கான்ட்ராக்டர் யார் பண்ணாங்க ? எக்ஸஸ்சா போயிருக்கிற கூடிய சில ப்ராஜெக்டை ஹைலைட் பண்ணி இருக்காங்க. அதுக்கு அந்தந்த அரசு டிபார்ட்மெண்ட் விளக்கம் கொடுத்து இருக்காங்க. அதோட ஒரிஜினல் டிசைன் என்ன ? இந்த டிசைன் மாற்றி எக்ஸ்ட்ரா செலவாகி இருக்குன்னா…  யாருக்காக இது மாற்றப்பட்டது ? அது சிஐஜி வழக்கமா செய்யக்கூடியது, அரசும் கொடுப்பது என தெரிவித்தார்.