கார்த்தியின் விருமன் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். முதல் திரைப்படமே இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக அதிதி ஷங்கர் தான் நடிக்க போகிறார் என தகவல் வெளியாகியது. எனினும் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கும் புது படத்தில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கர் கமிட்டாகி இருக்கிறாராம். இந்த படத்தை ராம்குமார் இயக்கப்போகிறார். இதற்கு முன்னதாக ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் வெளியான முண்டாசுப்பட்டி, ராட்சசன் இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இக்கூட்டணி 3-வது முறையாக இணைந்திருக்கும் படத்தில்தான் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.