டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய “அலைபாயுதே” படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இதையடுத்து மின்னலே, டும் டும் டும் உள்ளிட்ட பல படங்கள் நடித்ததன் வாயிலாக தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். அண்மையில் “ராக்கெட்ரி – நம்பி விளைவு” திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார் மாதவன். பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

மாதவன் தன் மகன் வேதாந்த் செய்யும் சாதனைகளை சோஷியல் மீடியாவில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேதாந்த் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்த Malaysia Invitational Age Group Swimming Championship போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு 5 தங்கப்பதக்கங்களை வென்று இருப்பதாக மாதவன் தன் இணையப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்து இருந்தார். இவருக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வேதாந்திற்கு வாழ்த்து கூறி நடிகர் விஜயகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.