நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி,   இந்த கையெழுத்து என்பது நீட்டு நுழைவு தேர்வுக்கு எதிரானது மட்டுமல்ல…  2000 ஆண்டுகாலமாக…. 3000 ஆண்டு காலமாக…  கைநாட்டாக இருந்த சமூகம்,  இன்றைக்கு கையெழுத்தாக மாறி இருக்கின்றோம். மீண்டும் கைநாட்டாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் ? இந்த கையெழுத்தை நாம் ஈட்டுதான் ஆக வேண்டும் என்று உங்கள் பெற்றோரிடத்தில் மாணவர்களிடத்தில் சொல்ல வேண்டும்.

அருமை தோழர்களே…. மாணவர்களே…  இறுதியாக ஒரே ஒரு செய்தியை சொல்லிவிட்டு நிறைவு செய்கிறேன். இங்க வந்து இருக்கோம்…  இங்கு வந்து உட்கார்ந்திருக்கிற பொழுது…  நீட் தேர்வுக்கு எதிரான ஒரு மனநிலை இருக்கும்.  வெளியே போன உடனே நம்முடைய மனநிலை மாறும்.அதெல்லாம் தவறு கிடையாது. இந்த வயதிற்கு இவ்வளவு நேரம் உட்கார்ந்து கேட்பதே பெரிது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அது கிடையாது.

பெரியார் வகுப்புவாரி உரிமை போராட்டம்.  முதல் சட்ட திருத்தம் அண்ணன் ராசா அவர்கள் குறிப்பிட்டார்.  அப்போது பெரியார் என்ன சொன்னார் என்றால்?  மாணவர்களே…  அதுவரை, 95 வயது வரை…  பெரியார் மாணவர்களை போராடியதற்கு அழைத்ததே கிடையாது. நீயெல்லாம் பள்ளிக்கூடம் போ, காலேஜ் போ.. நான் பார்த்துகிறேன் என்றார்.

முதன் முதலில் பெரியார் மாணவர்களை போராட்டத்திற்கு அழைத்தது இட ஒதுக்கீட்டுக்காக தான் ஏன் என்று சொன்னால் ? பெரியார் சொன்னார்…  இப்ப விட்டு விட்டோம் என்றால் ? இனிமேல் நம்மளை  படிக்கவே விட மாட்டார்கள். நீங்கெல்லாம் வீதிக்கு வாருங்கள். மாணவர்களே பள்ளிக்கூடத்தை புறக்கணித்துவிட்டு,  வீதிக்கு வந்து போராட வாருங்கள் என்று பெரியார் அழைத்தார்.

குலக்கல்வி திட்ட ஒழிப்பு போராட்டம்…  பெரியார் அத்தனை போராட்டத்தை நடத்தி இருக்கிறார். ஆனால் பெரியார் எந்த போராட்டத்திற்கு ஒரு வார்த்தை பயன்படுத்தினார் என்றால் ? கல்வி உரிமை என் பிள்ளைங்க படிக்க வேண்டும், என் சமூகம் படிக்க வேண்டும், இந்த குலக் கல்விக்குத் திட்டத்தை ஒழிப்பது என்பது என்னுடைய ஜீவாதாரண உயர்நிலைப் போராட்டம்.

உயிரை கொடுத்து கூட என் பிள்ளைகளின் கல்வியை நான் காப்பாற்றுவேன் என்று பெரியார் சொன்னார். இதெல்லாம் அய்யா சொன்னார்…  அவரோடு நின்னது யார் ? 90 வயது காரர்களா ? 80 வயது காரர்களா ?  60 வயது காரர்களா ?   50 வயதுக்காரர்களா ? இல்லை…  பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த பொழுது பெரியாருடன் நின்ற மாணவர்கள் 16 வயது,  17 வயது,  18 வயது அண்ணாவும், கலைஞரும் பெரியாருடன் நின்றார்கள் என தெரிவித்தார்.