தென்கிழக்கு வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.