கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் நேற்று சந்தை  நாள் என்பதால் எஸ்டேட் பகுதிகளில் இருந்து ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மார்க்கெட் பகுதியில் நடைபாதை படிக்கட்டு மற்றும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். மேலும் மழைநீர் கடைகளுக்குள் புகுந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டு வியாபாரிகள் வேதனை அடைந்தனர். இதே போல் வால்பாறையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகளும் மழை பெய்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.