அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொது மக்கள் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் திருமானூர் அருகே பெரிய வெடி விபத்தில் நடந்த 13 பேர் உயிரிழந்தனர். இதனால் பட்டாசுகள் மீது இருந்தால் அச்சம் பொது மக்களுக்கு அதிகரித்தது.

இந்நிலையில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் கடைவீதிகளில் அதிக கூட்டம் வருவதால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பட்டாசு கடையை நடமாட்டம் இல்லாத இடமாத்தில் மாற்றி வைக்க மாவட்ட நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் கடை வீதிகளில் பட்டாசு கடை வைப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜெயங்கொண்டம் கடைவீதியிலும் பட்டாசு கடைகள் வைக்க தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.