ரயில்வே எஸ் பி குணா சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் அதனை ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலமாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. முக்கியமாக பட்டாசுகளை ரயில் நிலையங்களுக்கும் ரயில் பெட்டியிலோ கொண்டு செல்லக்கூடாது.

அதனை மீறினால் ஆர். பி.எப் மூலமாக அபராதம் விதிக்கப்படும். இதனைyடுத்து பெண்கள் குழந்தைகள் ரயில்களில் பயணம் செய்யும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பெண் போலீசார் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். அனைத்து வகையான ரயில்களிலும் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் போலீசாரும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் 25-க்கும் மேற்பட்ட செல்போன்கள் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அந்த செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என கூறியுள்ளார்.