அட்சய திருதியை என்பதன் உண்மையான அர்த்தம் வளர்க என்பதுதான். அதனால் தான் இந்த நாளில் எந்த ஒரு விஷயத்தை ஆரம்பித்தாலும் அது மேலும் உயர்வு கொடுக்கும் என்பதுதான் ஐதீகம். இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் அந்த ஆண்டு முழுவதும் சிறந்த பெருக்கத்தை கொடுக்கும். இன்று காலை 4.17 மணிக்கு திருதியை தொடங்கிய நிலையில் மே 11ஆம் தேதி மதியம் 2.50 மணி வரை நீடிக்கிறது. இந்த நாளில் தங்கம் வாங்க தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் பலருக்கும் தங்கம் வாங்குவது கடினமான ஒன்றாக மாறிவிட்டது.

அதனால் அட்சய திருதியை நாளில் வேறு என்னென்ன பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வளத்தின் அடையாளமான பருப்பு வகைகள், பசுமை, ஆரோக்கியத்தை அடையாளமான கீரை மற்றும் காய்கறிகள், செல்வத்தின் சின்னங்கள் ஆனியன்கள், மண்குடம், சங்கு, புனித பொருளான நெய் ஆகியவற்றை தங்கத்திற்கு பதிலாக வாங்குவதும் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதேசமயம் இந்த நாளில் உங்களால் முடிந்தவரை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெறுவதற்கு உதவும்.